திமுக கூட்டணி கட்சிகள் விதிகளை மீறி செயல்படுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் அதிமுவினர் புகார்.!

Default Image

திமுக கூட்டணி கட்சிகள் உரிய அனுமதி பெறாமல் கொட்டகை அமைத்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகார்.

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரபபக இயங்கி வருகிறது.  ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், எதிர்க்கட்சியினர் என அவரவர் தரப்பு ஆதரவாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் இரு கட்சிகளை சேர்ந்த முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஆட்சியரிடம் புகார் : அதிலும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புகாரை ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் சென்று வழங்கினர். புகார் கொடுத்து வந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

அனுமதி பெறவில்லை : அப்போது முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், திமுக கூட்டணி கட்சிகள் உரிய அனுமதி பெறாமல் கொட்டகை அமைத்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும், 100க்கும் மேற்பட்டவர்களை கொண்டு கூட்டம் நடத்துகையில் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும் அது எதனையும் அவர்கள் பின்பற்றவில்லை எனவும், அந்த புகாரில் தெரித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்