விவாகரத்தான பெண்ணை ஏமாற்றியவர் மீது வழக்கு..!

Published by
Edison

விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய ஆனந்த் சர்மா மீது கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு.

கோவை மாவட்டம் பீளமேட்டில் வசிக்கின்ற பெண் ஒருவர்  துபாயில் பணிபுரிந்து இந்தியா திரும்பியவர்.இவர்,கணவனை பிரிந்து மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.அந்த பெண்ணுக்கு  தொழில் ஆர்வம் அதிகமாக இருந்ததால்,தொழில் ரீதியான விவரங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த காரணத்தை பயன்படுத்தி,சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் உயர்அதிகாரியாக பணியாற்றிய ஆனந்த் சர்மா என்பவர் அவரை தொடர்பு கொண்டார்.

இதனையடுத்து,அந்த பெண் கணவரை பிரிந்து வாழ்வதை சாதகமாக்கி தானும் மனைவியை பிரிந்து வாழ்வதாக கூறி ஆனந்த் சர்மா,அவருடன் நெருக்கமாக பழகினார்.

பின்னர்,தொழில் ரீதியாக வெளியூர் சென்றபோது,அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவரிடம் ஆனந்த் சர்மா பாலியல் ரீதியாக எல்லை மீறியுள்ளார். அந்த பெண்ணும் ஆனந்த் சர்மாவின் வார்த்தையினை நம்பி ஏமாந்துள்ளார் .

இதனையடுத்து,ஆனந்த் சர்மாவின் மீது சந்தேகம் வர,அவரைப் பற்றிய விபரங்களை அந்த பெண் சேகரிக்க ஆரம்பித்தார்.அப்போதுதான்,தன்னைப் போன்று திருமணமாகி கணவரை பிரிந்து வாழும் பல பெண்களை ஆனந்த் சர்மா ஏமாற்றியது அவருக்கு தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து,ஆனந்த் சர்மா மீது கோவை அனைத்து மகளிர் ஆணையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இதன்காரணமாக, போலீசார் விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்தது.

இதனால்,ஆனந்த் சர்மா மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும்,ஆனந்த் சர்மாவை கைது செய்து விசாரணை நடத்தும் முயற்சியில் மகளிர் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Recent Posts

பரந்தூர் வந்த த.வெ.க தலைவர் விஜய்! விவசாயிகள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

பரந்தூர் வந்த த.வெ.க தலைவர் விஜய்! விவசாயிகள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…

33 minutes ago

“உங்கள் காலடி மண்ணை தொட்டு.,” தவெக தலைவர் விஜயின் ஆவேசமான முழு பேச்சு இதோ….

காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…

56 minutes ago

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை : எடப்பாடி ஏன் அவசரப்படுகிறார்? அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி!

சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…

1 hour ago

அது வேற மக்கள்..இது வேற மக்களா? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சென்னை :  பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…

1 hour ago

பரந்தூர் வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய்! உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்…

காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…

2 hours ago

பிக் பாஸ் டைட்டிலை தட்டி தூக்கிய முத்துக்குமரன்! வாங்கிய பரிசுகள் என்னென்ன தெரியுமா?

சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…

2 hours ago