நாளை அரியலூர் மாவட்டத்தில் முழுமுடக்கம் கிடையாது என மாவட்ட ஆட்சியர் ரத்னா தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை அனைத்து மாநிலமும் தீவிரமாக கடைபிடித்து வருகிறது. மத்திய அரசு மே 3-ம் தேதிக்கு பிறகு தளர்வுகள் அறிவித்தது. இதைத்தொடந்து தமிழக அரசும் சில தளர்வுகளை அறிவித்தது. அதன்படி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இதைத்தொடந்து நாளை அரியலூர் மாவட்டத்தில் முழுமுடக்கம் கிடையாது என மாவட்ட ஆட்சியர் ரத்னா தெரிவித்துள்ளார். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நாளை கடைகளை திறக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களும் சமூக விலகலை கடைப்பிடித்து முக கவசத்துடன் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மும்மொழி விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் நேற்று மாலை கண்டன…
பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியானது முறையான சிபிஎஸ்இ (CBSE…
டெல்லி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டியானது நாளை…
டெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜேஷ் குமார் இன்று (பிப்ரவரி 18) பதவி ஓய்வு பெறுகிறார்.…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது.…
சென்னை : பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'பிங்க்' ஆட்டோ திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக ஆட்டோ முழுவதும் பிங்க்…