இந்த மாவட்டத்தில் நாளை முழுமுடக்கம் கிடையாது.!

Default Image

நாளை அரியலூர் மாவட்டத்தில் முழுமுடக்கம் கிடையாது  என மாவட்ட ஆட்சியர் ரத்னா தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை அனைத்து மாநிலமும் தீவிரமாக கடைபிடித்து வருகிறது. மத்திய அரசு  மே 3-ம் தேதிக்கு பிறகு தளர்வுகள் அறிவித்தது. இதைத்தொடந்து தமிழக அரசும் சில தளர்வுகளை அறிவித்தது. அதன்படி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இதைத்தொடந்து நாளை அரியலூர் மாவட்டத்தில் முழுமுடக்கம் கிடையாது  என மாவட்ட ஆட்சியர் ரத்னா தெரிவித்துள்ளார். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நாளை கடைகளை திறக்கலாம் என்று அறிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்களும் சமூக விலகலை கடைப்பிடித்து முக கவசத்துடன் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்