இந்த மாவட்டத்தில் இன்று 7 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை!
காஞ்சிபுரத்தில் 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் இன்று மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையினால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.இதன்காரணமாக, சாலைகள்,பள்ளிகள் என பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது.இதனால்,மழை பாதிப்பை பொறுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது.
அந்த வகையில்,மழைநீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வாலாஜாபாத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்டத்தில் முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அறிவித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில்,காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்து உள்ள 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,
- வாலாஜாபாத் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,
- அவளூர் அரசு மேல்நிலைப்பள்ளி,
- தம்மனூர் உயர்நிலைப்பள்ளி,
- பெரும்பாக்கம் நடுநிலைப்பள்ளி,
- வில்லிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
- அவளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
- தம்மனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.