மதுரை பட்டாசு ஆலை விபத்து.! அமைச்சர் மூர்த்தி மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு.!

Default Image

மதுரை அழகு சிறையில் தீ விபத்து ஏற்பட்ட பாட்டாசு ஆலையில் அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனிஷ் சேகர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.  

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகு சிறை கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலையின் இன்று தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை தரைமட்டமானது.

இதில் 15க்கும் மேற்பட்டவர்கள் காலையில் வேலை செய்து வந்துள்ளனர். அவர்களில் 10க்கும் மேற்பட்டவர்கள் சிகிக்சைக்காக மருத்துவமனையில் உள்ளனர். அதில் 5 பேர் படுகாயமுற்று தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். முதலில் 2 பேரின் உடல்கள் மீட்பு படையினரால் கண்டறியப்பட்டது. தற்போது பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், விபத்து நடைபெற்ற இடத்திற்கு அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதே போல அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தற்போது மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்