வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாராயணபுரம் காலனி உள்ளது. இங்கு வாழும் பட்டியலினத்தவர்களுக்கு தனி சுடுகாடு ஒன்று உள்ளது. ஆனால் சுடுகாட்டில் போதிய வசதி இல்லாததால் அவர்கள் இறந்தவர்களை பாலாற்றங்கரை சுடுகாட்டிற்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பாக பாலாற்றை கடக்க பாலம் கட்டப்பட்டது.
இதனால் பாலாற்றின் இருமருங்கிலும் ஆற்றுக்கு செல்லும் பாதைகளை வேலி அமைத்து பாதையை மறித்து விட்டதாக கூறப்படுகிறது .இதை தொடர்ந்து நாராயணபுரம் காலனி சார்ந்தவர்கள் இறந்தால் அவ்வழியாக எடுத்துச் செல்ல விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
சில நாள்களுக்கு முன் நாராயணபுரம் காலனி சார்ந்த குப்பன் என்பவர் இறந்து உள்ளார். குப்பன் உடலை விவசாயம் நிலம் வழியாக எடுத்து செல்ல விவசாயிகள் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் வேறுவழியில்லாமல் பாலத்தில் மேலே கயிற்றின் மூலமாக கீழே இறக்கி சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.
இதனால் நாராயணபுரம் காலனி மக்கள் பாலாற்றின் இருமருங்கிலும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது நிலங்களை அரசு கையகப்படுத்தி சுடுகாட்டிற்கு பாதை அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…