#Breaking : 10 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப்படையினர் விரைவு.!
கனமழை மீட்புப்பணிகளில் ஈடுபட மொத்தமாக 396 மீட்புப்படை வீரர்கள் 12 குழுக்களாக பிரிந்து 10 மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் நாளை இரவு கரையை கடக்கும் என்பதால் இன்று மிதமான மழை பெய்யவும், நாளை முதல் பெரும்பாலான கனமழை பெய்யவும் , வடதமிழகத்தில் அதிகனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனை அடுத்து, கனமழையை எதிர்கொள்ள முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தலைமை செயலர் இறையன்பு தலைமையில் முக்க்கிய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனை அடுத்து, தமிழகத்தில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை , நாகப்பட்டினம், செங்கல்பட்டு, விழுப்புரம் , தஞ்சை, கடலூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தமிழ்நாடு மீட்பு படையினர் என மொத்தமாக 396 மீட்புப்படை வீரர்கள் 12 குழுக்களாக பிரிந்து 10 மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று முதல் 11ஆம் தேதி வரையில் 4 நாட்களுக்கு மீட்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.