#Breaking:தமிழகத்தில் பொறியியல்,கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!

Default Image

தமிழகத்தில் பொறியியல், படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பரவிய கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பள்ளி,கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இதனால்,மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருகின்றனர்.எனினும்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால்,தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பு:

இந்நிலையில்,தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர, நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி,http://tneaonline.org என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும்,ரேண்டம் எண் தேதி ஆகஸ்ட் 25 ஆம் தேதியும்,தரவரிசை பட்டியல் செப்டம்பர் 4 ஆம் தேதியும் மற்றும் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு  செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும்,மேலும்,அக்டோபர் 20 க்குள் கலந்தாய்வை முடித்து மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலை & அறிவியல் கல்லூரி :

அதேபோல,மாநிலம் முழுவதும் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும்,http://tngasa.org & tngasa.in என்ற இணையதளங்களில் நாளை முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணசந்திரன் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்