#Breaking:கொரோனா 3 வது அலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!

கொரோனா 3 வது அலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை,மருத்துவக் கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது கடந்த மாதத்தில் தீவிரமாக பரவியது.எனினும்,அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்,தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் ஊரடங்கு காரணமாக தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது.
எனினும்,அடுத்ததாக கொரோனா 3-வது அலையானது சில மாதங்களில் பரவ வாய்ப்புள்ளது என்றும்,அது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தாக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில்,கொரோனா 3 வது அலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளின் டீன்களுக்கு தமிழக மருத்துவக் கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
- அறிவிப்பின்படி,கொரோனா 3-வது அலையானது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- எனவே,கொரோனா 3 வது அலையை எதிர்கொள்ள எந்த நேரத்திலும் குழந்தைகள் மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு குழந்தைகள் மருத்துவமனைகளிலும் குறைந்தது 100 படுக்கைகள் தயாராக இருக்க வேண்டும்.
- மருத்துவமனைகளில்,ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும்,ஐசியூ வசதி படுக்கைகளும் ஏற்படுத்திட வேண்டும்.
- குழந்தைகள் நல மருத்துவர்கள்,செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும்.
- அனைத்து மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு கண்காணிப்பாளர் தயாராக இருக்க வேண்டும்,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முதல்.., டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வரை…
March 1, 2025
சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!
March 1, 2025
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025