சற்று முன்…இவர்கள் 2 அரசு கல்லூரிகளில் பணியாற்ற வேண்டும் – கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

தமிழகத்தில் உள்ள 13 அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 31 கௌரவ விரிவுரையாளர்கள் மறுஉத்தரவு வரும் வரை 2 அரசு கல்லூரிகளில் பணியாற்ற வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
பணிப்பளுவின் அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்கள் 2 அரசு கல்லூரிகளில் பணியாற்ற வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரண சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக,கௌரவ விரிவுரையாளர்களுக்கு அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“பணிப்பளு காரணமாக தமிழகத்தில் உள்ள 13 அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 31 கௌரவ விரிவுரையாளர்களுக்கு அருகில் உள்ள அரசு கல்லூரிகளில் கூடுதலாக பணி ஒதுக்கப்பட்டுள்ளது.எனவே,இவர்கள் அனைவரும் மறுஉத்தரவு வரும் வரை இரு அரசு கல்லூரிகளிலும் பணியாற்ற வேண்டும்”,என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025