சட்டத்தின் வழியே நிகழ்த்தப்பட்ட சர்வாதிகாரம்-சீமான்
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் அறிவித்தார்.அதில் ஜம்மு-காஷ்மீருக்கு கொடுக்கப்படும் சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசியல் சாசனத்தின் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வதாக கூறினார்.இது தொடர்பாக பல முக்கிய அரசியல் கட்சித்தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், காஷ்மீர் மக்களின் உரிமைகளைக் காக்கும் 370, 35ஏ சட்டப்பிரிவுகளை ரத்து செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை. சட்டத்தின் வழியே நிகழ்த்தப்பட்ட சர்வாதிகாரம். ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று சீமான் தெரிவித்துள்ளார்.