#Breaking : புயல் எச்சரிக்கை.! காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு.!
கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த 50 நீச்சல் வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ள்ளார்.
வங்க கடலில் நேற்று உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அதே போல் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை, மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் தமிழக அரசு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தற்போது, காவலர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த 50 நீச்சல் வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும், அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பிக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.