சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் மரணத்திற்கு காரணமான சாத்தான்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று விஜய் அவர்களின் தந்தை வலியுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூரமான சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலக்கியுள்ளது. இதற்கு எதிராக கண்டனம் தெரிவித்து பல அரசியல் பிரமுகர்களும், ரஜினி, கமல் உட்பட அனைத்து பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது விஜய் தரப்பிலிருந்து அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா என்பது கொடிய வைரஸ் என்கிறார்கள். அதனால் பாதிக்கப் பட்டவர்கள் கூட பலர் உயிருடன் மீண்டு வருகின்றனர்.
மேலும் ஆனால் சாத்தான்குளம் போலீஸ் அதிகாரிகளை போன்றவர்களிடம் மாட்டி கொண்டால் என்ன ஆவது, நினைத்து பார்த்தாலே ஈரக்கொலை நடுங்குது என்று கூறியுள்ளார். மேலும் இந்த கொரோனா காலத்தில் எத்தனை போலீஸ் அதிகாரிகள் கடவுளின் பிரதிநிதிகளாக வேலை செய்தார்கள்.
அதனை மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. அப்படிப்பட்ட போலீஸ் துறையில் இதுபோன்ற கொடுமைக்காரர்களா? இந்த சாத்தான்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த சாத்தான்களை காப்பாற்ற நினைக்கும் யாரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…