மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றித்தர வேண்டும்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு.!

Default Image

மாநிலங்களின் வளர்ச்சியில் தான் இந்தியாவின் வளர்ச்சியும் உள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளை துவங்கிவைப்பதற்காக இரண்டுநாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.

இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, சென்னை–கோவை வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவை நினைவுகூரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, பல்லாவரத்தில்  நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், முக்கியமான பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சென்னை-கோவை வந்தே பாரத் டிக்கெட் கட்டணத்தை குறைக்கவேண்டும், சென்னை-மதுரை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கவேண்டும் என்று கூறினார்.

மேலும் பல்வேறு இனங்களைச்சேர்ந்த, பலதரப்பட்ட மொழிகளை பேசும் மக்கள் வாழும் மாநிலங்களைக் கொண்ட ஒன்றிய அரசானது, மாநிலங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றும்போது தான் இந்தியா வளமை அடைகிறது.

தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க வேண்டும், மேலும் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டம் மற்றும் சாலை திட்டங்களுக்கான பணிகளை விரைந்து முடிக்க நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் மாநிலங்களின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசின் பங்கீடு மிக மிக அவசியம், மாநிலங்கள் வளர்ச்சியடைந்தால் தான் இந்தியாவும் வளர்ச்சி அடையும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்