குற்ற வழக்கு விவரங்களை விளம்பரம் செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையம்
குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை உரிய முறையில் விளம்பரம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை உரிய முறையில் விளம்பரம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. செய்தித்தாள், ஊடகங்கள், அரசியல் கட்சியின் வலைத்தளங்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள், வாக்குப்பதிவு முடியும் முன் 3 வெவ்வேறு நாளில் விளம்பரம் செய்ய வேண்டும் என கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.