நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு துணை முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தார்!!!

Default Image
  • ப்ரெண்டான் டாரன்ட் என்ற ஆஸ்திரேலியா நபர்  நடத்திய துப்பாக்கி தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர்.
  • இந்த  சம்பவம் தொடர்பாக  ப்ரெண்டான் டாரன்ட் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
  • ப்ரெண்டான் டாரன்ட் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு விட்டார்.
நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறிஸ்ட் சர்ச்சிலுள்ள இரு மசூதிகளில்  கடந்த வெள்ளிக்கிழமை ப்ரெண்டான் டாரன்ட் என்ற ஆஸ்திரேலியா நபர்  நடத்திய துப்பாக்கி தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர்.
இந்த  சம்பவம் தொடர்பாக  ப்ரெண்டான் டாரன்ட் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ப்ரெண்டான் டாரன்ட் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு விட்டார்.
நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அந்த நாட்டை உலுக்கி உள்ளது. இந்த  சம்பவத்திற்கு அந்நாடு பிரதமர் ஜெசிந்தா கண்டனம் தெரிவித்து உள்ளார்.மேலும் இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தனக்கு  மிகுந்த அதிர்ச்சியும் , மனவேதனையும் அளிக்கிறது , எனவும் சம்பவத்தில் உயிர் இழந்த குடும்பத்தினருக்கு  தனது ஆழ்ந்த இரங்கலை கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்