#Breaking:சென்னை: மக்கள் தங்குவதற்கு பள்ளிகளை திறந்து வையுங்கள் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

சென்னையில் மக்கள் தங்குவதற்கு ஏதுவாக பள்ளிகளை திறந்து வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால்,பாதிக்கப்பட்டுள்ள மக்களை தங்க வைக்க ஏதுவாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளை திறந்து வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி வளாகத்துக்குள் தண்ணீர் தேங்காமல் இருப்பதையும் சுற்றுச்சுவர்கள், கட்டடங்கள் பாதிக்கப்படாமலும், மின் இணைப்பு சரியாக இருப்பதையும் உறுதிப்படுத்தவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்,பட்டுப்போன மரங்கள்,முறிந்த நிலையில் உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றவும்,மழைநீர் சேகரிப்பு மற்றும் குடிநீர் தொட்டி ஆகியவற்றை பாதுகாப்பான வகையில் மூடிவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.