சட்டவிரோத கனிம கடத்தல்.. 4 ஆயிரம் வாகனங்கள்.. ரூ.41 கோடி வசூல்.! சட்டப்பேரவையில் தகவல்.!

Published by
மணிகண்டன்

2023- 2023 மார்ச் வரையில் அனுமதியின்றி நடந்த கனிமவள கடத்தல் பற்றியும், அதற்கான நடவடிக்கை பற்றியும் கனிம வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நடந்த கனிமவள கடத்தல் பற்றி தமிழக சட்டப்பேரவையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் , கடந்த 2022 முதல் கடந்த மாதம் 2023 மார்ச் வரையில் நடந்த கனிம வள கடத்தல் பற்றி கூறப்பட்டுள்ளது.

பெரிய சவால் :

தமிழகத்தில் கனிமங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படுவதும், அதனை கடத்தும் சம்பவத்தை தடுப்பதும் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது என்று கனிம வளத்துறை தெரிவித்துள்ளது.

41 கோடி ரூபாய் பறிமுதல் :

அப்படி கடத்தலை தடுக்க, கடந்த 2022 ஆண்டு முதல் மார்ச் 2023 வரை உரிய அனுமதி இன்றி கனிமங்களை கடத்திய வழக்கில் 4,799 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும், ரூ.41 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடபட்டுள்ளது.

ஜிபிஎஸ் கருவி :

இந்த கனிம கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 4 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றும், குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடத்தலை தடுக்க குத்தகைதாரர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் செலவில் குறிப்பிட்ட வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய மென்பொருள் :

சட்டவிரோத கனிம கடத்தலை தடுக்கும் வகையில் வாகன கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவதற்கான மென்பொருள் ஒன்று உருவாக்கப்படும் என்று சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை சார்பில் சட்டப்பேரவை குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை… 15ம் தேதி தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை… 15ம் தேதி தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

22 minutes ago

“மார்ச் 23ல் ஐபிஎல் தொடர் தொடக்கம்” பிசிசிஐ அறிவிப்பு!

டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…

33 minutes ago

மகள் – மனைவியுடன் கியூட் உரையாடல்… மகனுடன் வெற்றியை பகிர்ந்து கொண்ட அஜித் குமார்.!

துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…

1 hour ago

அதிமுக, தேமுதிக-வை தொடர்ந்து இடைத்தேர்தலை புறக்கணித்த பாஜக!

ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…

2 hours ago

கார் ரேஸில் வாகை சூடிய அஜித்… தேசிய கொடியோடு வெற்றி கொண்டாட்டம்! – வைரல் வீடியோ..

துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…

2 hours ago

“முதல்வரின் ஆணவம் நல்லதல்ல” முதலமைச்சருக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்.!

சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…

2 hours ago