#Breaking:”கல்லூரி மாணவர்களே…இனி ஆன்லைனில் தேர்வுகள் கிடையாது” – உயர்கல்வித்துறை அறிவிப்பு!

Default Image

அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் இனி நேரடியாக மட்டுமே நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வந்த நிலையில், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.ஆனால்,தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில்,கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி விட்டு, தற்போது நேரடி தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.மேலும், மாணவர்கள்,ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தக் கோரி முழக்கமிட்டு போராட்டத்தை நடத்தினர்.இதனால் செமஸ்டர் தேர்வுகள் 2  வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இதனைத் தொடர்ந்து,பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் டிசம்பர் 13-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்  என்றும், தேர்வுக்கான விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் இன்டெர்னல், வைவா, செமஸ்டர் என அனைத்து தேர்வுகளும் நேரடியாகவே நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

இந்நிலையில்,நேரடி தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,ஆன்லைன் தேர்வுகள் நடத்தக்கோரியும் இன்றும் ஒரு சில பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் போராடி வரும் நிலையில் அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பொறியியல்,கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை தேர்வுகளும் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live 06.11.2024
Trump
Minister Senthil Balaji - Tamilnadu CM MK Stalin
Kamala Harris
donald trump speak
Kamala Harris
american election 2024