மாணவர்கள் காலையில் சிற்றுண்டி சாப்பிட ஏதுவாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்.
தமிழகத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான வேலை நேரத்தை மாற்ற பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதால் நேரத்தை மாற்றி அமைக்க முடிவு என தகவல் கூறப்படுகிறது. மாணவர்கள் காலையில் சிற்றுண்டி சாப்பிட ஏதுவாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட உள்ளது என்றும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறந்ததும் புதிய நேரம் அமலுக்கு வருகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி நேரத்திற்குப் பிறகு பள்ளி வளாகத்தில் ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. இதனிடையே, இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், அரசு பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். முதற்கட்டமாக சில மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், தொலைதூர கிராமங்களிலும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் படிப்படியாக இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…