திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு, முதல்வர் பழனிச்சாமி இரங்கல்.
திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், அவரது உடல் நல்ல முன்னேற்றத்தில் இருந்து வந்ததாக தெரிவித்த மருத்துவர்கள், இரண்டு நாட்களுக்கு முன்பதாக மீண்டும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிக்கை வெளியிட்டனர். இதனையடுத்து, இன்று காலை 8.05 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் தான் ட்வீட்டர் பக்கத்தில், ‘திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தான் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…