விவசாயிகள் – நெல் சுமக்கும் தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் உள்ள செருமங்கலம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, நெல் கொள்முதல் நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று திருவாரூர் பயணம் மேற்கொண்டார். அப்போது திருவாரூரில் உள்ள செருமங்கலம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, நெல் கொள்முதல் நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது அவரிடம் விதைகளை பாதுகாக்க வாங்கி உருவாக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை விசாயிகள் முன்வைத்தனர்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருவாரூர் மண் நோக்கிய பயணத்தின்போது, செருமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, நெல் கொள்முதல் நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். விவசாயிகள் – நெல் சுமக்கும் தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.’ என தெரிவித்துள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருவாரூர் மண் நோக்கிய பயணத்தின்போது, செருமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, நெல் கொள்முதல் நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
விவசாயிகள் – நெல் சுமக்கும் தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். pic.twitter.com/ApYI3074y4
— M.K.Stalin (@mkstalin) July 6, 2021