மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.! – இணை அமைச்சர் முருகன் உறுதி.!
புதுச்சேரி மீனவர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உறுதியளித்துள்ளார்.
புதுச்சேரியில், ஸ்ரீ வெங்டேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் Modi@20 எனும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த புத்தகத்தை அறிமுகப்படுத்ததும் விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் நேற்று கலந்துகொண்டு வெளியிட்டார்.
பின்னர் புதுச்சேரி மீனவர்களுடன் அவர்களின் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடினார். அதுகுறித்து பேசிய அவர், மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ‘ என உறுதியளித்தார்.
தூண்டில் வளைவு, படகு பாதிப்பு இடம், நாட்டு படகுகளை, ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்ற 60 சதவீத மானியம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் இணையமைச்சர் எல்.முருகன் உறுதியளித்தார்.