மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானது – பிரேமலதா விஜயகாந்த்

மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு , மருத்துவர் பணியிடங்களை குறைக்க கூடாது மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்,மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானது.மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து வலியுறுத்துவேன் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.