3 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்ட தாழ்வு மண்டலம் ! அதிக மழை பெய்ய வாய்ப்பு

Published by
Venu

3 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்ட தாழ்வு மண்டலம் உள்ள நிலையில், அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ராமநாதபுரம் அருகே ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகராமல் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வலுவிழந்த புரெவி புயலானது , ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, ராமநாதபுரத்திற்கு தென்மேற்கில் 40 கி.மீ. தூரத்திலும் பாம்பனுக்கு மேற்கு – தென்மேற்கு திசையில் 70 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.கன்னியாகுமரிக்கு வட கிழக்கில் 160 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. 

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் மெதுவாக மேற்கு-தென்மேற்கு நோக்கி நகர்ந்து ராமநாதபுரம் மற்றும் அருகிலுள்ள தூத்துக்குடி மாவட்டங்களை கடக்க வாய்ப்புள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஒரு சில இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் லட்சத்தீவில் ஒரு சில இடங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் தெற்கு தமிழ்நாடு கடற்கரைக்கு வெளியே செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

Published by
Venu

Recent Posts

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…

1 hour ago

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…

2 hours ago

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

3 hours ago

திருக்கார்த்திகை 2024- திருவண்ணாமலை திருக்கார்த்திகை எப்போது?.

திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…

3 hours ago

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

4 hours ago

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

5 hours ago