பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும்- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்!

பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டு அதன் பின் முடிவு எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் ஆத்திகரித்து கொண்டே சென்றாலும் இந்தியாவில் சற்று குறைந்துள்ளது என்றே கூறலாம். இருப்பினும், அரசு பல தளர்வுகளை அறிவித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் புதிய வகை வீரியமுள்ள கொரானா வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து அச்சத்தால் மேலும் அறிவிக்கப்பட இருந்த தளர்வுகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அது போல பள்ளிகள் திறப்பது குறித்து தற்போது வரை சரியான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், இன்று சென்னை எம்ஜிஆர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அவர்கள் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளார். பொங்கலுக்கு பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா என நேரில் ஆய்வு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் பின் பேசிய அவர், பெற்றோர்களிடம் கருத்து கேட்டறிந்த பின்பு தான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.