தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல்…!தேர்வுத்தாள்களை மாணவர்களின் முன்னிலையில் மறுமதிப்பீடு செய்ய முடிவு …!அண்ணா பல்கலைகழகம் அதிரடி முடிவு
தேர்வுத்தாள்களை மாணவர்களின் முன்னிலையில் மறுமதிப்பீடு செய்ய முடிவு செய்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம் .
கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா உட்பட 10பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.2017 ஏப்ரலில் நடைபெற்ற தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோரிடம் லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.
பின்னர் இவரிடம் நடத்திய விசாரணையில் பல முறைக்கேடுகள் நடைபெற்றது தெரியவந்தது.
மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல் புகார் எழுந்ததால் அண்ணா பல்கலைகழகம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் தேர்வுத்தாள்களை மாணவர்களின் முன்னிலையில் மறுமதிப்பீடு செய்ய முடிவு செய்துள்ளது.மேலும் வரும் செமஸ்டரில் இருந்தே புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.