பள்ளிகள் திறக்கும் முடிவை, மேலும் 15 நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் – சீமான்

NTK Seeman

அவசர அவசரமாக பள்ளிகளைத் திறந்து மாணவர்களை வாட்டி வதைக்க முனைவது கண்டனத்திற்குரியது என சீமான் அறிக்கை.

தமிழக முழுவதும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதன்படி, 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதியும், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பில் மாற்றம் ஏற்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளிகளை ஜூன் 1ம் தேதியில் இருந்து 15 நாட்கள் கழித்து திறக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் சூன்-01 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. தாங்க முடியாத கடும் வெயில், மற்றும் கொரோனா தொற்றுப் பரவலும் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு அவசர அவசரமாக பள்ளிகளைத் திறந்து மாணவச் செல்வங்களை வாட்டி வதைக்க முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.

மாணவர் சேர்க்கை என்ற பெயரில் பகற்கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகளின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து தமிழ்நாடு அரசு ஜூன் 1 முதல் பள்ளிகளைத் திறக்க முடிவெடுத்திருப்பது பெருங்கொடுமையாகும். அரசின் சிறிதும் பொறுப்பற்ற இம்முடிவு மாணவர்களின் உடல் மற்றும் மன நலனில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, கோடை வெப்ப, கொரோனோ பரவலை கருத்திற்கொண்டு்ம், மாணவர்களின் நலன் காக்கும் வகையிலும் பள்ளிகள் திறக்கும் முடிவை, மேலும் 15 நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்