அணுக்கழிவு மையம் கட்டும் முடிவை கைவிட வேண்டும் -மு.க.ஸ்டாலின்

கூடங்குளம் வளாகத்திற்குள் அணுக்கழிவு மையம் கட்டும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எச்சரிக்கையை மத்திய – மாநில அரசுகள் நினைவில் கொள்ள வேண்டும் .
மக்கள் பாதுகாப்பு, சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க கூடங்குளம் வளாகத்திற்குள் அணுக்கழிவு மையம் கட்டும் முடிவை உடனடியாக கைவிட்டு, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.