கோயம்பேடு சந்தையில் சிறு வியாபாரிகளை அனுமதிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்- முதல்வர் பழனிசாமி!

கோயம்பேடு சந்தையில் பழம், சிறு வியாபாரிகளை அனுமதிப்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தின்போது பேசிய முதல்வர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதாகவும், பண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்யவேண்டும் என தெரிவித்தார். மேலும், கோயம்பேடு சந்தையில் பழம், சிறு வியாபாரிகளை அனுமதிப்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025