கொரோனா தொற்று அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கேரளா மாநிலத்திலும் இதே நிலைதான் என்றாலும், அங்கு மதுவிற்கு அடிமையானவர்கள் மதுவின்றி தற்கொலை செய்துகொள்ளும் அவலம் அதிகமாக அரங்கேறியது.
இதன் காரணமாக மதுவுக்கு அடிமையானவர்கள் குறிப்பிட்ட அளவு மதுவை மருத்துவர்களின் பரிந்துரை படி மது வாங்கிக்கொள்ளலாம் என கேரள அரசு அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று கேரள மருத்துவர்கள் கருப்பு துணி அணிந்துகொண்டு கருப்பு தினமாக அனுசரித்தனர்.எனவே கேரள அரசின் இந்த முடிவுக்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றமானது, கேரள அரசின் இந்த முடிவுக்கு 3 வாரத்திற்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில்,மதுபோதைக்கு அடிமையானவர்களுக்கு போதை மீட்பு சிகிச்சை வழங்குவது தான் தீர்வு. மாறாக, அவர்களுக்கு அரசு மருத்துவர்கள் பரிந்துரைப்படி மது வழங்கலாம் என்ற கேரள அரசின் முடிவு அபத்தமானது. இதற்கு அறிவியல் ஆதாரமில்லை என்று கேரள அரசின் ஆணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…