என் தங்கச்சி என்ன ஆசைப்பட்டிருப்பாளோ அதை முதல்வர் செய்துள்ளார்.! – பிரியாவின் அண்ணன் உருக்கம்.!

Default Image

ஒரு அரசியல் கட்சியாக பணம் கொடுத்து நிவாரணம் என கூறாமல், எங்கள் குடும்பத்தில் ஒரு ஆளாக நினைத்து அனைத்து உதவிகளையும் முதல்வர் செய்துள்ளார். – மறைந்த பிரியாவின் அண்ணன் உருக்கம்.

அண்மையில், தமிழகத்தில் மிக பரவலாக பேசப்பட்ட சம்பவம் என்றால் , அது சென்னை அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் தான். இந்த சம்பவத்தை அடுத்து சம்பந்தப்பட்ட 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் துறை ரீதியிலான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து உள்ளது. ஏற்கனவே, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற சென்று வந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பிரியாவின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை செய்தார்.

இது குறித்து பிரியாவின் குடும்பத்தார் செய்தியாளர்களிடம் குறிப்பிடுகையில், ஒரு அரசியல் கட்சியாக பணம் கொடுத்து நிவாரணம் என கூறாமல், எங்கள் குடும்பத்தில் ஒரு ஆளாக நினைத்து அனைத்து உதவிகளையும் முதல்வர் செய்துள்ளார் என ப்ரியாவின் அண்ணன் கூறினார்.

மேலும், எங்கள் வீட்டுக்கு முதல்வர் வருவாருனு நினைத்து பார்க்கவில்லை. என கூறினார்.  பிரியாவின் இன்னொரு சகோதரர் பேசுகையில், ‘ முதல்வர் எண்னிடம், பிரியாவின் ஆசையை என்னை நிறைவேற்ற சொன்னார். நீ ஒரு கால்பந்தாட்ட வீரராக வரவேண்டும் என கூறி ஊக்கம் அளித்தார்.’ என குறிப்பிட்டார்.

 மேலும், அமைச்சர், எம்எல்ஏ, கவுன்சிலர், மேயர் என அனைவரும் வந்து உதவி செய்தார்கள். என பிரியாவின் அண்ணன் கூறினார். பிரியாவின் தந்தை பேசுகையில், ‘  எங்கள் வீடு ஒழுகுவதை பார்த்தார்கள். இதனை அமைச்சர்கள் சுப்ரமணியன், சேகர்பாபு ஆகியோர் பார்த்து முதல்வரிடம் கூறி, புதியதாக வீடு கொடுத்தார்கள். எங்களுக்கு ஒன்னும் குறைவைக்கல. ஒரே குறை என் பொண்ணு இல்ல. அதுக்கு அவர், விளையாட செல்லும் மற்ற குழந்தைகளுக்கு உதவு செய்யுங்கள். என முதல்வர் கூறியதாக பிரியாவின் தந்தை செய்தியாளர்களிடம் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்