தமிழக பட்ஜெட்:சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதம்!
சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரு தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்தார்.அதில், கல்வி, மருத்துவம், கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மாணவிகளுக்கு மாதம் ரூ.1000:
குறிப்பாக அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
வேளாண் பட்ஜெட்:
இதை தொடர்ந்து,நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.அப்போது,இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க பட்டதாரி ஒருவருக்கு ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்படும் என்ற பல்வேறுஅறிவிப்புகளை வெளியிட்டார்.
இன்று விவாதம்:
இதனையடுத்து,பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையின் நாள் முடிவுற்றது.மீண்டும் சட்ட பேரவை வருகின்ற திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கூடும் என அறிவித்தார். இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது.அதன்படி,10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இன்றைய விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்ப தயார உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும்,மேகதாது அணை தொடர்பாக பேரவையில் இன்று தனி தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படுகிறது.