தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதற்கு இடையில் தினசரி நிலவரங்களை குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார்.அந்த வகையில் நேற்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது , தமிழகத்தில் நேற்று 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது . சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 2-ஆம் தேதி உயிரிழந்தார்.ரத்த மாதிரிகளின் முடிவுகள் தற்போது வந்துள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதேபோல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.நள்ளிரவில் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…