சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புதுகாமூர் தெருவில் வசித்து வருபவர் முத்தாபாய்(65) . இவர் மீனா(17) என்ற தனது வளர்ப்பு மகளுடன் வசித்து வருகிறார் . இவரது வீட்டின் ஒரு பகுதியில் ஜானகிராமன் (40) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் . இவர்களுக்கு காமாட்சி என்ற மனைவியும், சுரேஷ் மற்றும் ஹேமந்த் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் மீனா சமையல் செய்ய எரிவாயு அடுப்பை பற்ற வைத்ததும் , திடீரென சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தது.இதில் இடிபாடுகளில் சிக்கி காமாட்சியும் , அவரது மகன் ஹேமந்தும் உயிரிழந்தனர் .மேலும் முத்தாபாய் வீட்டிற்கு அருகிலுள்ள சந்திராம்மாள் என்பவரது வீடும் இடிந்து விழுந்ததில் அவரும் பரிதாபமாக இறந்தார்.
அதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் , இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த மீனா , ஜானகிராமன், சுரேஷ் மற்றும் முத்தாபாய் ஆகியோர் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்ட பின், அங்கிருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு மீனா, சுரேஷ் மற்றும் முத்தாபாய் ஆகிய மூவரையும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் .
இந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்தாபாய் மற்றும் அவரது மகள் மீனா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் . சமையல் எரிவாயு உருளை வெடித்து நிகழ்ந்த விபத்தில் பலியானார்களின் எண்ணிக்கை தற்போது 5-ஆக உயர்ந்துள்ளது .
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…