இடைத்தேர்தல் தொகுதியில் மக்களிடையே பெரிய அனுதாபம் இருக்கிறது.! அமைச்சர் முத்துசாமி பேட்டி.!
திருமகன் ஈவெரா மறைவு இங்கு மக்களிடையே பெரிய அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. – அமைச்சர் முத்துசாமி.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள தற்போதே பிரதான கட்சிகள் தங்கள் வேலைகளை விறுவிறுவென ஆரம்பித்து விட்டன.
வேட்பாளர்கள் அறிவிக்கும் முன்னரே திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தங்கள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டது. காங்கிரசுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அமைச்சர் முத்துசாமி ஈரோடு கிழக்கு தொகுதியில் வீதி வீதியாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த பிரச்சாரத்தில், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருமகன் ஈவெரா மறைவு இங்கு மக்களிடையே பெரிய அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொகுதி மட்டுமல்லாமல் பலரும் இதனை வேதனையான சம்பவமாக எடுத்து கொண்டுள்ளனர். வேட்பாளராக கை சின்னத்தில் யார் நின்றாலும் அவர்கள் மிக பெரிய வெற்றி பெறுவார்கள். என அவர் தெரிவித்தார்.