பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கியின் மறைவு பேரிழப்பு – திமுக தலைவர்!
பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கியின் மறைவு பேரிழப்பு என திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரஷ்ய நாட்டில் தமிழ் அறிஞராக இருந்த பேராசிரியர் அலெக்சாண்டர் அவர்கள் கொரோனாவால் இன்று மரணம் அடைந்தார். 1941 இல் பிறந்த இவர் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று சமஸ்கிருதம் தமிழ் ஆகிய இரண்டிலும் புலமை பெற்று சரளமாக தமிழ் பேசக் கூடியவர். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக ரஷ்யாவில் 10 பல்கலைகழகங்களில் இளங்கலை மாணவர்களுக்கு தமிழ் கற்பித்து வந்த இவர், ஆண்டுக்கு ஒருமுறை சங்க இலக்கியம் பற்றிய வாசிப்பு பட்டறையும் நடத்தி வந்தார். 79 வயதாகும் பேராசிரியர் அலெக்சாண்டர் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலமானார்.
இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், ரஷ்ய நாட்டு தமிழ் அறிஞர் அலெக்ஸாண்டர் அவர்களின் மறைவு பேரிழப்பு எனவும், ரஷ்ய பல்கலைக்கழகங்களில் தமிழ் பயிற்றுவித்து வந்த இவர் வாயிலாக தமிழறிந்த மேல் நாட்டவர் ஏராளம், செம்மொழி மாநாட்டில் தொல்காப்பியம் குறித்து ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தவர் இவர் எனவும் அவருக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் – பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மறைவு பேரிழப்பு.
ரஷ்ய பல்கலைக்கழகங்களில் தமிழ் பயிற்றுவித்த துப்யான்ஸ்கி வாயிலாகத் தமிழ் அறிந்த மேல்நாட்டவர் ஏராளம்.
செம்மொழி மாநாட்டில் தொல்காப்பியம் குறித்த ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தவர்!
ஆழ்ந்த இரங்கல்! pic.twitter.com/mi6NHXnFL6
— M.K.Stalin (@mkstalin) November 19, 2020