மக்களை சிந்திக்க வைக்கும் கருத்துக்களை தன் நடிப்பின் மூலம் நகைச்சுவையாக கொண்டு சேர்ப்பதில் சிறந்த நடிகராக விளங்கிய நடிகர் விவேக்.
நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘மக்களின் அன்புக்குரிய, மக்களை சிந்திக்க வைக்கும் கருத்துக்களை தன் நடிப்பின் மூலம் நகைச்சுவையாக கொண்டு சேர்ப்பதில் சிறந்த நடிகராக விளங்கிய நடிகர் விவேக், இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி என்னை ஆற்றொன்னா துயரத்தில் ஆழ்த்திவிட்டது.
நடிகர் விவேக் அவர்களை இழந்து வாடும் அவரது ரசிகர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்!.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…