மதுவில் தண்ணீர் என நினைத்து ஆசிட் கலந்து குடித்த இளைஞர் உயிரிழப்பு.!

மதுவில் தண்ணீர் என நினைத்து ஆசிட் கலந்து குடித்த இளைஞர் உயிரிழப்பு
சென்னை வால்டாக்ஸ் சாலை சர்காரத்தில் வசித்து வந்தவர் கௌதம் இவர் அந்த பகுதியில் கூலித்தொழில் செய்து வருகிறார், மேலும் இவருக்கு குடிப்பழக்கம் அதிகமகா உள்ளது இந்த நிலையில் இவர் நேற்று தனது வீட்டில் மது அருந்தியுள்ளார். அப்போது தண்ணீர் தீர்ந்ததால் போதையில் மது குடிப்பதற்காக அருகில் இருந்த ஆசிட்டை தண்ணீர் என நினைத்து மதுவில் கலந்து குடித்துள்ளார்.
இந்நிலையில் ஆசிட் குடித்த கவுதம் மயங்கி விழுந்துள்ளார், இதனால் இதைப்பார்த்த அருகிலிருந்த நபர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்பொழுது அங்கு சென்று பார்த்த மருத்துவர்கள் வரும் வழியிலேய இறந்து விட்டதாக கூறியுள்ளனர், இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக யானைகவுனி போலீசார் விசாரித்து வருகின்றனர்
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025