மாணவி பிரியாவின் உயிரிழப்புக்கு காரணமான இரண்டு மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு (17) பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி ஜவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் பிரியாவுக்கு ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டதால் வலது கால் அகற்றப்பட்டது.
இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக்குறைவு தான் மாணவி பிரியாவின் உயிரிழப்புக்கு காரணம். கவனக்குறைவாக செயல்பட்ட இரண்டு மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், பிரியாவின் சகோதரர்கள் மூவரில் ஒருவருக்கு அரசு வேலைக்கான உத்தரவாதம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…