ஆணவத்துக்கு முடிவு ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை – டிடிவி தினகரன்

Default Image

இன்று அதிகாரம் கிடைத்ததும் ஆணவத்தின் உச்சத்தில் இவரை போன்றோர் பேசிவருகின்றனர் என டிடிவி தினகரன் ட்வீட். 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், திமுகவில் எப்போதும் நம்பர் ஒன் அணி என்றால், அது சட்டத்துறை தான்.  ஜெயலலிதாவை A1 ஆகவும், அவரது நெருங்கிய தோழி சசிகலாவை A2 வாக கம்பி எண்ண வைத்ததும் இந்த சட்டத்துறைதான் என விமர்சித்துள்ளார்.

டிடிவி தினகரன் ட்வீட் 

இதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திமுகவின் சட்டப்பிரிவு அணியினர் மத்தியில் பேசிய அவசர அமைச்சர், அம்மா அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.

திமுகவினர் அம்மா அவர்களை வீழ்த்த பல்வேறு உத்திகளை எடுத்து செயல்பட்டபோதிலும், அம்மா அவர்கள் வாழ்ந்த காலம் வரை மக்கள் மன்றத்தின் முன் தீயசக்திகளால் அவரை வெல்லமுடியவில்லை. அம்மா அவர்கள் உயிரோடு இருக்கும்வரை திமுகவானது மக்களால் தொடர்ந்து தண்டிக்கப்பட்டது அவசர அமைச்சரும் அறிந்திருக்கக்கூடும்.

இன்று அதிகாரம் கிடைத்ததும் ஆணவத்தின் உச்சத்தில் இவரை போன்றோர் பேசிவருகின்றனர். ஆணவத்துக்கு முடிவு ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்