இபிஎஸ், அவரது கூட்டாளிகள் விரட்டியடிக்கப்படும் நாள் வெகுதூரம் இல்லை.. ஓபிஎஸ் ஆதரவாளர்!
பொய்மையின் மொத்த உருவம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் விமர்சனம்.
மக்கள் முடிவுக்கு மாறாக செயல்பட்டு கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் விரட்டியடிக்கப்படும் நாள் வெகுதூரம் இல்லை என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், எட்டுத் தேர்தலில் தோல்வியை கண்ட எடப்பாடிபழனிச்சாமி மற்றும் அவரது கூட்டாளிகள், அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அவர்களை பற்றி பேச தகுதியும், எந்த அருகதையும் கிடையாது.
2024ம் ஆண்டு தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தேர்தலை சந்தித்து வெற்றி பெறும். இன்னமும் கட்சியின் வளர்ச்சிக்காக, கட்சி ஒற்றுமைக்காக ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
2017ஆம் ஆண்டு பழனிசாமியின் ஆட்சி கவிழாமல் இருந்ததுக்கு காரணம் ஓபிஎஸ் தான் என கூறியுள்ளார். மேலும், ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்பது கோயபல்ஸ் தத்துவம்.
இந்த கோயபல்ஸ் வேலையை தான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்து கொண்டிருக்கிறார், பொய்மையின் மொத்த உருவம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான் என விமர்சித்துள்ளார்.