சென்னையில் விடிய விடிய மழை இன்றும் தொடரும்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விடிய விடிய கனமழை
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கக்கூடும் என்று வானிலை மையம் நேற்று அறிவித்தது .இதனைத்தொடர்ந்து நேற்று இரவு முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது .மீனவர்கள் இதனால் அரிபிக்கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையின் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது .வெப்பச்சலனத்தால் இன்று சென்னையில் மழை தொடரும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது .வேலூர் ,திருவண்ணாமலை , விழுப்புரம் ,புதுக்கோட்டை ,திருவாரூர் ,திருச்சி ,தஞ்சை ,நாமக்கல் ஆகிய பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது .இதனால் வேலூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார் .