மாமியாருக்கு மருமகள் செய்த செயல்!குவியும் பாராட்டுக்கள்!

- வாக்களிப்பதற்கு மாமியார் விருப்பப்பட்டதால் மாமியாரை தூக்கி வந்த மருமகள்.
- இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்த அனைவரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையின் பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட சென்னீர்க்குப்பம் ஊராட்சி ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் பாப்பம்மாள் ஆவார்.இவருக்கு 87 வயசு ஆகிறது.மேலும் இவருக்கு பாண்டியம்மாள் என்ற மருமகளும் உள்ளார்.
இந்நிலையில் வயதான பாப்பம்மாள் நான் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று தனது ஆசையை மருமகள் பாண்டியம்மாளிடம் தெரிவித்துள்ளார்.ஆனால் பாண்டியம்மாள் உங்களுக்கு கண் சரியாக தெரியாது கால் அவ்வளவாக நடக்க முடியாது என்று கூறியுள்ளார்.
ஆனால் பாப்பம்மாளோ அதெல்லாம் எனக்கு தெரியாது நான் வாக்களித்தே ஆகவேண்டும் என கூறியதால் ஆட்டோவில் அழைத்து வந்துள்ளார்.பின்னே வாக்கு சாவடி மையத்திற்குள் அழைத்து வர வீல் சேர் இல்லாத காரணத்தால் மருமகள் மாமியாரை தூக்கி வந்துள்ளார்.
இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்த அனைவரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.