மாணவர்கள் கவனத்திற்கு… தனியார் பள்ளியில் அரசு செலவில் இலவச கல்வி.! விண்ணப்பிக்க கடைசி தேதி…
25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளியில் இலவசமாக படிக்க விண்ணப்பிக்க தேதி வெளியிடப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கட்டாய கல்வி திட்டம் சட்டத்திருத்தம் 2009இன் படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதில், பயிலும் மாணவர்களுக்கு அரசே கல்வி செலவை ஏற்கும். இதற்கு மாணவரின் புகைப்படம், ஆதார், சாதி சான்று, பெற்றோர்களின் அடையாள ஆவணங்கள், வருமான சான்று உள்ளிட்டவை கொண்டு இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
2023- 2024 கல்வியாண்டில் புதியதாக எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் மாணவர்கள் சேர விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி , மார்ச் மாதம் 20ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்க அறிவுறுத்தபட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு குறைவாக இருக்கலாம். ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் பெற்றோர்களின் குழந்தைகள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாது.