குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா பக்தர்களின்றி கொடியேற்றம்…

Default Image

தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு பக்தர்களின்றி கொண்டாட்டம்.

இந்தாண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம், நேற்று காலை 10.45 மணியளவில் நடந்தது. பின்னர் கொடிமரத்திற்கு 16 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. அதை தொடர்ந்து முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்,  மாலை 6 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை அம்மன்  திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளல் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் 2ம் நாள் திருவிழாவான இன்று முதல் 25ம் தேதி வரை தினமும் காலை 6 முதல் இரவு 8 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், வாகனங்களில் வந்த பக்தர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்