தினமும் மோகன் என்ற காவலர் தனது வீட்டிலிருந்து 20கி.மீ தொலைவிலுள்ள காவல்நிலையத்திற்கு 40கி.மீ தூரம் வரை பயணம் செய்து வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு பகுதியை சேர்ந்த இவர் மோகன். 32 வயதுடைய இவர் விழுப்புரத்தில் உள்ள கிளியனூர் காவல்நிலையத்தில் முதல்நிலை போலீஸாக கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்து 20கி.மீ தொலைவில் இருக்கும் காவல்நிலையத்திற்கு தினமும் சைக்கிளில் பயணம் செய்து தான் செல்வாராம். ஆம் மோகன் கடந்த 2 ஆண்டுகளாக தினமும் சைக்கிளில் 40கி.மீ பயணம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மோகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது இடதுகால் முட்டியில் அடிப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதனையடுத்து அவரது உடல் தசைகளை சீராக்குவதற்காக சைக்கிள் ஓட்ட தொடங்கிய அவர் தற்போது தினமும் காவல்நிலையத்திற்கு 40கி.மீ தூரம் வரை சைக்கிளில் சென்று வருகிறார். இதனால் தனது உடல் நிலை சீராக இருப்பதாகவும், மனஅழுத்தம் குறைவதாகவும் மோகன் கூறியுள்ளார். மேலும் தினமும் சைக்கிளில் செல்லும் மோகனை அப்பகுதி மக்கள் சைக்கிள் போலீஸ் என்று அன்புடன் அழைப்பதாக கூறப்படுகிறது.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…