ஜெயலலிதாவை விட மேலானவர் தற்போதைய முதல்வர் – அமைச்சர் தங்கமணி !
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விட தற்போதைய முதல்வர் மேலானவர் என்றும், அவர் சாதாரணமாக இருப்பதை கண்டு யாரும் எளிதாய் நினைக்க வேண்டாம் என்று மின்சாரத்துறை தங்கமணி தெரிவித்துள்ளார். சட்ட சபையில் மின்சாரத்துறை மானிய கோரிக்கையின் பொது இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உயர் மின் கோபுரம் கீழ் நின்றால் உடலில் மின்சாரம் பாயும் என்று கூறி பொய் பிரச்சாரம் செய்ததாக குறிப்பிட்டு பேசிய அமைச்சர், அவர் நின்றது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட கோபுரம் என்றும் ஆனால் அது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அமைத்ததாக கூறியுள்ளார்.
மேலும், தற்போதைய முதல்வர் அமைதியாய் இருப்பதால் தான் இது போன்ற வீண் போய் பிரச்சாரம் செய்கிறீர்கள் என்று கூறியுள்ள அமைச்சர் அவர் அமைதியை கண்டு யாரும் எளிதில் எடை போட வேண்டாம் என்று கூறி உள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விட முதல்வர் எடப்பாடி அவர்கள் மேலானவர் என்றும் கூறியுள்ளார்.