ஊரடங்கை கண்டிப்பாக நீட்டிக்க வேண்டும் ! கடிதமும் எழுதவுள்ளேன்-புதுவை முதல்வர்

ஊரடங்கை கண்டிப்பாக நீட்டிக்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் 5000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே கொரோனாவை தடுக்கும் நோக்கில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்குஇடையில் தான் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று செய்திகள் அதிகம் வலம் வந்தது.இதற்கு இடையில் பிரதமர் மோடி, அனைத்து கட்சி கூட்டம் , மக்கள் பிரதிநிதிகள், வல்லுநர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.அந்த கூட்டத்தில் மாநில அரசுகள், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும். என கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற வருகின்ற 14-ஆம் தேதிக்கு பிறகு தேவைப்பட்டால் ஊரடங்கு சட்டத்தை நீட்டிக்க மாநில அரசு உதவ தயாராக உள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025